தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக தகவல்கள்
மொழி: தமிழ் | English
சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

Soorasamharam

சூரசம்ஹாரம் என்பது முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த வெற்றி விழாவாகும். இது ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்த சஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.

முடிவடைந்து 32360 நாட்கள் ஆகிறது 09-11-1937

முதன்மை தேதி மற்றும் பஞ்சாங்கம்

Tue, 09 Nov 1937
செவ்வாய்
1937
ஈஸ்வர ஐப்பசி 24
மறுநாள் அதிகாலை 12:47 வரை வளர்பிறை சஷ்டி பின்பு வளர்பிறை சப்தமி காலை 06:10 வரை பூராடம் பின்பு உத்திராடம்
06:09
17:52

அந்த கிரகோரியன் நாளுக்கு தரவு இருக்கும்போது திதி மற்றும் நேர வரிகள் இங்கு சுருக்கமாகத் தெரிகின்றன; முழு விவரம் தினசரி காலண்டரில்.

ஆன்மீக திருவிழா தொடர்ச்சி

தமிழ்நாட்டு ஆன்மீக அனுபவம்

சூரசம்ஹாரத்தின் வரலாறு மற்றும் சிறப்பு

ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை சஷ்டி அன்று 'சூரசம்ஹாரம்' வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மன் என்ற அசுரனை அழிப்பதற்காகவே சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து முருகப்பெருமான் அவதரித்தார்.

அன்னை பராசக்தியிடம் இருந்து ஞானவேல் பெற்று, திருச்செந்தூர் கடலோரத்தில் ஆறு நாட்கள் சூரபத்மனுடன் போர் புரிந்து, இறுதியாக அவனை அழித்து சேவலாகவும் மயிலாகவும் மாற்றி ஆட்கொண்ட நன்னாளே சூரசம்ஹார விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

கந்த சஷ்டி விரத முறைகள்

சஷ்டி விரதம் என்பது முருகனுக்கு உகந்த மிகச் சிறந்த விரதமாகும். ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை தொடங்கி சஷ்டி வரை தொடர்ந்து ஆறு நாட்கள் பக்தர்கள் கடுமையான விரதம் இருப்பார்கள். 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் (கருப்பையில்) கிடைக்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

ஆறு நாட்களும் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற முருகனின் துதிகளைப் பாடி வழிபடுவார்கள். ஆறாம் நாளான சஷ்டி அன்று நடைபெறும் சூரசம்ஹாரத்தைக் கண்டு தரிசித்த பின்பே பக்தர்கள் தங்களது விரதத்தை நிறைவு செய்வார்கள்.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்

உலகெங்கும் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றாலும், படைவீடான திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார விழா தனிச் சிறப்பு வாய்ந்தது. கடலோரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்வைக் காண கண்கள் கோடி வேண்டும்.

சூரபத்மன் பல்வேறு உருவங்களில் வந்து போர் புரிவதும், இறுதியில் முருகனின் வேல் அவனை வீழ்த்துவதும் மிகத் தத்ரூபமாக அரங்கேற்றப்படும். அடுத்த நாள் முருகனுக்கும் தெய்வானைக்கும் நடைபெறும் திருக்கல்யாணத்தோடு சஷ்டி விழா இனிதே நிறைவடையும்.

உள் வழிசெலுத்தல்

தொடர்புடைய பண்டிகைகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தமிழ் மாதமான ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் தொடங்கி சஷ்டி வரை ஆறு நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.

சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், எதிரிகள் தொல்லை நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும்.

நமது மனதில் எழும் ஆணவம், கன்மம், மாயை (சூரபத்மன்) ஆகியவற்றை ஞானம் என்னும் வேலால் அழித்து இறைவனை அடைவதே இதன் ஆன்மீகத் தத்துவமாகும்.

விழாத் தேதிகள் — முன்பும் பின்பும்

03-11-1932 1932 ஆண்டு முன்பு
24-10-1933 1933 ஆண்டு முன்பு
12-11-1934 1934 ஆண்டு முன்பு
02-11-1935 1935 ஆண்டு முன்பு
21-10-1936 1936 ஆண்டு முன்பு
09-11-1937 1937 ஆண்டு இப்போது பார்க்கிறீர்கள்